மூலிகை தேநீர்
கொரனோவால் எந்த உயிரிழப்பும் இல்லாமல் சித்தா முறையில் சிறப்பாக கட்டுப்படுத்தி, குணப்படுத்தியதாக சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டிய சித்த மருத்துவர் திரு.வீரபாபு அவர்கள் கொரோனாவைக் குணப்படுத்த கபசுரக் குடிநீருக்கு துணை மருந்தாக அவர் கண்டுபிடித்த
மூலிகை தேநீரையும் சேர்த்துக் கொடுத்து தமிழக அரசின் ஒத்துழைப்புடன் ஆங்கில மருந்து இல்லாமல், முழுவதும் சித்தா மருந்துகளைக் கொண்டே #கொரோனாவை ஒரே வாரத்தில் குணப்படுத்தி வருகிறார். அவ்வாறு தாம் கொடுக்கும் மூலிகை தேநீரில் சேரும் பொருட்களை மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவித்து உள்ளார்.
அதன் விபரங்கள்
#மூலிகை #தேநீர்:
சுக்கு – 100 கிராம்,
அதிமதுரம் – 100 கிராம்,
சித்தரத்தை – 30 கிராம்
கடுக்காய்த்தோல்- 30 கிராம்
மஞ்சள் – 10 கிராம்,
திப்பிலி – 5 கிராம்,
ஓமம் – 5 கிராம்
கிராம்பு- 5 கிராம்,
மிளகு – 5 கிராம்
மேற்குறிய அனைத்து பொருட்களும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
இவற்றை இடித்துப் பொடிசெய்து ஒரு டப்பாவில் பத்திரப்படுத்தவும்.
ஒரு பாத்திரத்தில் 400 மி.லி நீர் விட்டு அதில் இந்த பொடியை 10 கிராம் அளவு போட்டு நன்கு கொதிக்க விடவும். இக்கசாய நீர் 100 மி.லி அளவாக வற்றியதும் ஒரு தேக்கரண்டி நாட்டுச் சர்க்கரை அல்லது 10 மி.லி அளவு தேன் சேர்த்து கிளறி, இறக்கி ஆற வைக்கவும்.
இளம் சூடாக ஆறிய பின்பு இதை வடிகட்டி காலையில் உணவிற்கு பின்பு குடிக்கவும். இரவிலும் இதே போல் செய்து உணவிற்குப் பின்பு குடிக்கவும்.
பொதுவாக கொரோனா சிகிச்சையில் உள்ளவர்களுக்கு கபசுரக் குடிநீரை உணவிற்கு முன்பும், இந்த #மூலிகை #தேநீரை உணவிற்குப் பின்பும் கொடுக்கப் படுகிறது.
இந்த மூலிகை தேநீர் அடுப்பில் கொதிக்கும் போது 5 கற்பூரவள்ளி இலைகள், 10 புதினா இலைகளும் சேர்க்கலாம்.
இந்த மூலிகைத் தேநீரை பெரியவருக்கு ஒருவேளைக்கு 100 மி.லி அளவு கொடுக்க வேண்டும்.
சிறுவர்களுக்கு இதில் பாதி அளவு 50 மி.லி போதும்.
இதை கொரோனா அறிகுறிகள் குணமாகும் வரை கொடுக்க வேண்டும்.
கொரோனா இல்லாதவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இதை தினமும் ஒருவேளை வீதம் காலையில் குடித்து வரலாம்.!
பத்தியமில்லை.